புஷ்பா 2-ல் இணைந்து மிரட்டல் வில்லன்..வெறித்தனமாக இருக்கும் போலேயே...

pushpa 2

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘புஷ்பா 2’ படத்தில் மிரட்டலான வில்லன் ஒருவர் இணைந்துள்ளார். 

புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி வெளியான வீடியோ தான். அந்த வீடியோவில், புஷ்பா எங்கு தொடங்கிய நிலையில் கடைசியாக கெத்தாக புஷ்பா இருக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

pushpa 2

முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பதி அடர்ந்த காடுகளில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. 

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகிறது.  இந்நிலையில் இப்படத்தின் பிரபல வில்லன் நடிகரான ஜெகபதி பாபு இணைந்துள்ளார். அவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழில் விஸ்வாசம், அண்ணாத்த, லிங்கா உள்ளிட்ட படங்களில் கொடூரமான வில்லனாக மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story