ஐதராபாத் கல்லூரியில் புஷ்பா 2 படப்பிடிப்பு தீவிரம்
மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுக்கு முதல் பாகத்தில் குறைந்த காட்சிகளே இருந்தாலும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான படத்தின் வெற்றிக்கு பெரிதும் பக்க பலமாக அமைந்துள்ளது. ஊ சொல்றியா, சாமி சாமி பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. சமந்தா ஒரே பாடலுக்கு நடனமாடி மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகாவின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.