புஷ்பா 2 படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

புஷ்பா 2 படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

முழு படப்பிடிப்பையும் மார்ச்சில் நிறைவு செய்து, ஏப்ரலில் புரமோசனை தொடங்க படக்குழு முடிவு

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியானது. படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளியாகும் என படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

புஷ்பா 2 படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு படப்பிடிப்பையும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்து, ஏப்ரல்  மாதத்தில் படத்திற்கான புரமோசனை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

Share this story