வசூலை வாரி குவிக்கும் 'புஷ்பா'... 100 கோடி கிளப்பில் இணைந்தது
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து மிகவும் பிரம்மாண்ட உருவாகியுள்ள திரைப்படம் ‘புஷ்பா’. நடிகர் அல்லு அர்ஜூனின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று வெளியானது.

எதிர்பார்த்தபடியே இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று ராதிகாவின் சாமி பாடலும் சமந்தாவின் ஐட்டம் பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூலையும் குவித்து வருகிறது. அதன்படி தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் முதல் நாள் வசூல் 30 கோடியும், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 5 கோடியும் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரு நாட்களில் மட்டும் 116 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

