இருக்கு....... தரமான சம்பவம் இருக்கு, - ‘புஷ்பா தி ரூல்’ குறித்து வெளியான மாஸ் அப்டேட்.

photo

‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட்டான நிலையில அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதற்கு ‘புஷ்பா தி ரூல்’ என பெயரிட்டுள்ளனர், சீனா, தாய்லாந்து நாடுகளின் அடர்ந்த காட்டுபகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெறித்தனமான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

photo

அதாவது ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாம், அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த கிளிம்ஸ் 3 நிமிடத்திற்கான ஆக்ஷன் காட்சிகளுடன் நம்மை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

photo

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ,தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் என பலர் நடித்திருந்தனர். இரண்டாவது பாகத்தில் சாய்பல்லவியும் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது. படத்தை சுகுமார் இயக்கினார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்தார். என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

photo

Share this story