வாய்பிளக்க வைக்கும் ‘புஷ்பா2’ படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம்.

photo

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் அமோக வெற்றியால் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புஷ்பா தி ரூல் படத்தில் நடித்து வரும்  அல்லு அர்ஜூனுக்கு எவ்வளவு சம்பளம்  என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

photo

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ‘புஷ்பா தி ரூல்’ படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் கிளின்ஸ் வீடியோ வெளியாகி நல்ல ரீச் அடைந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜூன் சம்பளம் எதுவும் வாங்காமல் வரும் லாபத்தில் 33% சதவீதத்தை தனது பங்காக கேட்டுள்ளாராம்.

அதன்படி பார்த்தால் படம் ரூ.1000 கோடி வசூலித்தால் அல்லு அர்ஜூனுக்கு மட்டும் ரூ.330 கோடி வரை பாகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி பலரையும் அட இவ்வளவு சம்பளமா அல்லு அர்ஜூனுக்கு என வாய் பிளக்க வைத்துள்ளது.

Share this story