“அவதார்” உடன் இணையும் “புஷ்பா 2”….. வெளியான வேற லெவல் அப்டேட்..

photo

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ஹிட்டடித்தது ‘புஷ்பா’ . அதிலும் அந்த படத்தில் சமந்தவின் கவர்ச்சி தூக்கலான நடனம் உலக சினிமா ரசிகர்களை சமந்தா பக்கம்  இழுத்தது. படத்தில் அனைத்து பாடலுமே வேறலெவல் ஹிட் என்றே சொல்ல வேண்டும்.

photo

இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களை ஆட்கொண்டது. அதனாலேயே முதல் பாகத்தை  விட பிரம்மாண்டமாக இரண்டாம் பாகத்தை தயாரிக்க சுகுமார் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார். இதை தொடர்ந்து  படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் வெளியாகவுள்ளது அந்த படத்தோடு புஷ்பா படம் கைகோர்க்க உள்ளது, அதாவது  அவதார் படம் வெளியாகும் டிசம்பர் 16-ஆம் தேதி ‘புஷ்பா2’ படத்தில் டீசர் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this story