தனுஷின் இந்த திரைப்படம் தரமா... இருக்கும் மிஸ் பண்ணீடாதீங்க – சர்வதேச ரசிகர்களுக்கு பரிந்துரைக்கும் ராஜமௌலி.

photo

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் வாரி குவித்தது. சமீபத்தில் கூட இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கியது.

photo

இந்த நிலையில் ராஜமௌலி தி நியூயார்க் இதழிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அனைவரும் பார்க்க வேண்டிய ஐந்து இந்திய படங்களை பரிந்துரைக்கும்படி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு  அவர், நடிகர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றஆடுகளம்படத்தை பரிந்துரைத்தார். தொடர்ந்து தெலுங்கு படமான சங்கராபரணம், இந்தி திரைப்படங்களான பாண்டிட் குயின்முன்னா பாய் எம்.பி.பி.எஸ், பிளாக் ஃப்ரைடே ஆகிய படங்களையும் பரிந்துரைத்துள்ளார்.

photo

இதற்கு ஆடுகளம் படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் அதாவதுநமது நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநரான ஒருவர் எங்களின் 'ஆடுகளம்' படத்தைப் பாராட்டியதில் எங்கள் மனம் மிக்க மகிழ்ச்சியடைகிறது. உங்களால் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் எங்களின் திரைப்படம் குறித்து பேசிய உங்கள் அன்பான சைகைக்கு எங்களது நன்றி" என குறிப்பிட்டனர்.

photo

Share this story