'ஆர்ஆர்ஆர்' படத்தை பாராட்ட பணம் கொடுக்கப்பட்டதா ?... தெலுங்கு திரையுலகில் வெடித்த சர்ச்சை !

rrr

'ஆர்ஆர்ஆர்' படத்தை பாராட்ட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரனுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

 ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பான் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட வீரர்களின் கதைக்களம் கொண்ட இப்படம் இந்திய அளவில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. 

rrr

சுமார் 1200 கோடி வசூல் சாதனை செய்துள்ள இந்த படம் கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ், ஹாலிவுட் கிரிக்ட்டிக்ஸ் உள்ளிட்ட விருதுகளை குவித்துள்ளது. தற்போது ஆஸ்கர் இறுதிப்போட்டிக்கும் இந்த படம் தேர்வாகி உள்ளது. நாளை நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் இந்த படம் சாதனை படைக்குமா என இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

rrr

இந்த விருது விழாவையொட்டி அமெரிக்கா சென்றிருந்த ராஜமெளலி, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார். அப்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தை அவர் வெகுவாக பாராட்டினார். அதேநேரம் ஆஸ்கர் விருது பப்ளிசிட்டிக்காக மட்டும் இதுவரை 80 கோடி ரூபாய் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஸ்டீபன் ஃபீல்பர்க் ஆகிய இருவருக்கும் பணம் கொடுத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை பாராட்ட சொன்னதாக சர்ச்சை ஒன்று தெலுங்கு திரையுலகில் வெடித்துள்ளது. ஆனால் இது உண்மையில்லை என்று ராஜமெளலி தரப்பில் கூறப்படுகிறது. 

 

Share this story