ஜப்பானில் வசூலை குவிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’... படக்குழு வெளியிட்ட செம்ம அப்டேட்

rrrr

ஜப்பானில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. 

 இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்துள்ளார். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்திருந்தனர். 

rrrr

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. பிரம்மாண்டமான உருவாக்கம், அசத்தலான காட்சி அமைப்பு, அற்புதமான இசை மற்றும் கலை வடிவம் கொண்டு தொழில்நுட்ப ரீதியிலும் இப்படம் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படம் சுமார் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.‌

இந்தியாவில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அந்தெந்த மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இந்நிலையில் இந்த படம் ஜப்பானில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இதுவரை 119 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. 

Share this story