ஆஸ்கார் விருதை வெல்லுமா ஆர்.ஆர்.ஆர் ?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

rrr

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பெறுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

உலக சினிமாவில் எட்டாகனியாக இருப்பது ஆஸ்கர் விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், கலைஞர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது அமெரிக்காவில் டால்பி தியேட்டரில் நாளை அதிகாலை நடைபெறவுள்ளது. 

rrr

இந்த விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. அதேபோன்று ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆகிய குறும்படங்களும் இந்தியாவில் இருந்து தேர்வாகியுள்ளது. நாளை காலை நடைபெறும் போட்டியில் இந்த படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

இந்த விருது விழாவில் பங்கேற்காக இயக்குனர் ராஜமெளலி, நடிகர் ராம் சரண் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடித்த இந்த படம் இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story