சூப்பர் ஸ்டார் பாராட்டியது நம்ப முடியாத தருணம்... ‘வீர சிம்ஹா ரெட்டி’ இயக்குனர் நெகிழ்ச்சி !

veera simha reddy

 பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குனரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி’. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார்.

veera simha reddy

 மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் கிருஷ்ணாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். 100 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

veera simha reddy

இந்நிலையில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதையடுத்து படத்தின் இயக்குனர் கோபிசந்த் மல்லினேனியை போனில் அழைத்த, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி பதிவிட்டுள்ளார். அதில் இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். தலைவர், ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வீர சிம்ஹா ரெட்டி படத்தை பார்த்த அவர் என்னை பாராட்டிய வார்த்தைகள், அவர் உணர்ந்த உணர்வுகள் ஆகிய விட இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமில்லை. நன்றி ரஜினி சார் என்று கூறியுள்ளார். 

 

Share this story