மிரட்டலான லுக்கில் ராம் சரண்... ‘கேம் சேஞ்சர்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்திற்காக பாடல்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம் சரண் பிறந்தநாளையொட்டி இன்று காலை இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.