தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ராம் சரண்.. முதல் படமே வேற லெவல்ல இருக்கப்போகுது !

ram charan

நடிகர் ராம் சரண் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் ராம் சரண். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.  

இந்த படத்தையடுத்து புச்சி பாபு இயக்கத்தில் தனது 16வது படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிப்பில் பிசியாக இருக்கும் ராம் சரண், தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நண்பர் யு.வி.கிரியேஷன்ஸ் விக்ரமுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு வி மெகா பிக்சர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவரது தந்தை சிரஞ்சீவி, கொனிடேலா சொந்தமாக தயாரிப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து ராம் சரண் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் பாடமாக நடிகர் அகில் அக்கினேனியின் படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story