செருப்புக்கூட போடாமல் அமெரிக்கா சென்ற ராம் சரண்... வியப்பில் ரசிகர்கள் !

ram charan

செருப்புக்கூட போடாமல் நடிகர் ராம் சரண் அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த பாடல் ‘நாட்டு நாட்டு’. இந்த பாடலுக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பெற்ற அந்த பாடல் விருதை தட்டிச் சென்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

ram charan

இதற்கிடையே இந்த ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் சிறந்த படம், நடிகர், நடிகை, பாடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்கள் இறுதி செய்யப்பட்டது. 

ram charan

அந்த இறுதி பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 5 பாடல்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில் ‘நாட்டு நாட்டு’ வெற்றி வாகை சூடுவா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறனர். 

இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா பங்கேற்பதற்காக இன்று அமெரிக்காவிற்கு நடிகர் ராம் சரண் சென்றார். அப்போது கருப்பு நிற உடை, கழுத்தில் மாலை மற்றும் காலில் செருப்புக்கூட போடாமல் சென்றிருக்கிறார். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருப்பதால் தற்போது செருப்புக்கூட போடாமல் ஆஸ்கர் விழாவிற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story