ராம் சரண் மனைவி உபாசனாவுக்கு வளைகாப்பு... விழாவில் குவிந்த பிரபலங்கள் !

Ram Charan

தெலுங்கு நடிகர் ராம் சரண் உபாசனாவிற்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றது. 

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ராம் சரண். முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகனாக இவர், ‘சிறுத்தை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்தார். வரலாற்று பின்னணியை கொண்ட இப்படமும் மாபெரும் வெற்றிப்பெற்றது. 

ram

இதையடுத்து மீண்டும் ராஜமௌலியுடன் கூட்டணி அமைத்த ராம் சரண், ‘ஆர்.ஆர்.ஆர்’. படத்தில் நடித்தார். இந்த படம் ஆஸ்கர் வென்று உலக அளவில் பேசப்படும் படமாக மாறிவிட்டது.தற்போது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ram

 இந்நிலையில் ராம் சரணின் மனைவி உபாசனாவின் வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டு தம்பதியரை வாழ்த்தினர். இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

ram‌ 

Share this story