எம்.எஸ்.தோனியுடன் ராம்சரண்... புகைப்படங்கள் வைரல்....

எம்.எஸ்.தோனியுடன் ராம்சரண்... புகைப்படங்கள் வைரல்....

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

எம்.எஸ்.தோனியுடன் ராம்சரண்... புகைப்படங்கள் வைரல்....

இந்திய அணியின் கேப்டனாக 11 ஆண்டுகள் விளையாடியுள்ள தோனி, அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். உலக அளவில் சிறந்த கேப்டனாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையே, நீண்ட நாட்களாக நீளமான தலை முடியுடன் வலம் வந்த தோனி, தற்போது புதிய தோற்றத்தில் மாறியுள்ளார். ஆலிம் ஹக்கிம் என்பவர் அவருக்கு புதி ஹேர்ஸ்டைல் செய்துள்ளார். விண்டேஜ் லுக்கில் தோனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளன.

எம்.எஸ்.தோனியுடன் ராம்சரண்... புகைப்படங்கள் வைரல்....

இந்நிலையில், மும்பையில் எம்.எஸ்.தோனியுடன், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் தோனியும், ராம்சரணும் ஒன்றாக இணைந்து ஒரு விளம்பர காட்சியில் நடித்துள்ளனர். அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

Share this story