ஆஸ்கர் அகாடமியில் பொறுப்பை பெற்றார் நடிகர் ‘ராம் சரண்’.
1699016896121

நடிகர் ராம் சரண் ஆஸ்கர் அகாடமியில் விருதுகளை வாங்கவும், அதனை மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முக்கிய பெறுப்பேற்றுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், தெலுங்கில் ‘சிறுத்தா’ எனும் படத்தில் நடித்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ராம் சரண் தற்போது ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராம் சரண் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்த குழு ஆஸ்கர் விருதை அமைக்கவும் அதனை மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட குழுவாகும். இந்த தகவலை ஆஸ்கர் விருது குழு தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ராம் சரணுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.