“கேம் சேஞ்சர்” படத்திற்காக 'ராம் சரண்' வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

photo

ராம் சரண் தன்னுடைய 15வது திரைப்படமான “கேம் சஞ்சர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் எவ்வளவு தொகையை சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி வாய்பிளக்க வைத்துள்ளது.

photo

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளில் இந்த படத்தின் டைட்டிலான ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது சுமார் 60 கோடியை அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதற்கு முன்னர் 30-40 கோடியை சம்பளமாக ராம் சரண் பெற்றுவந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் திரைப்படங்களில் நடிப்பதை கடந்து, விளம்பரப்படங்கள் நடிப்பது , தயாரிப்பாளர், மற்றும்  சில பிரண்டுகளின் அம்பாசிடராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story