அளவில்லாத அன்பு ‘ராம்சரண்’ மகளின் செம கியூட் வீடியோ.

photo

ராம்சரண் தேஜா, உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகி கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தை பிறந்ததால் எக்கசக்கமான வாழ்த்துகள் குவிந்தது. இந்த நிலையில் உபாசனா பிறந்தநாளை முன்னிட்டு அழகிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் மகனாக சினிமாவில் ஆறிமுகமானாலும் தனக்கான பெயரையும், ரசிகர் பட்டாளத்தையும் தனது நடிப்பின் மூலமாக சேர்த்துள்ளார் ராம் சரண்.  குளோபல் ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் வலம் வரும் ராம்சரண் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பலரது பாராட்டுகளை பெற்றது.

photo

ராம் சரண் உபாசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு ‘க்ளின் காரா கோனிடேலாஎன பெயர் சூட்டப்பட்டதை சமீபத்தில் அறிவித்தனர். ராம்சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் குழந்தை பிறந்தது  முதல் குழந்தைக்காக குடும்பத்தினர் என்னவெல்லாம் செய்தார்கள் பெயர் சூட்டுதல் என பல அழகான தருணத்தை அதில் காணமுட்டிந்தது. இந்த கியூட்டான வீடியோவை பலரும் ரசித்து, வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this story