மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ரம்யா நம்பீசன்.. புதிய படத்திற்கான அப்டேட்

ramya nambeesan

 10 வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்யா நம்பீசன் தெலுங்கில் படம் ஒன்றில் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவர், தமிழில் ‘ஒரு நாள் இரு கனவு’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதன்பிறகு ஆட்டநாயகன்,  குள்ளநரி கூட்டம், டமால் டுமீல், சத்யா, சீதக்காதி, நாலு போலீசும், நல்ல இருந்த ஊரும், நட்புட்னா என்னனு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ramya nambeesan

இதையடுத்து விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், பஹிரா, ரேஞ்சர், தமிழரசன் உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

அதனால் தமிழில் வாய்ப்புகள் குறைந்த வந்ததால் தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். ‘தயா’ என்ற பெயரில் உருவாகியுள்ள தெலுங்கு வெப் சீரிஸில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். விரைவில இந்த வெப் சீரிஸில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story