அதிக கெட்ட வார்த்தை.. முகம் சுளிக்க வைக்கும் ஆபாசம்.. ராணாவின் ‘ ராணா நாயுடு’ வெப் தொடரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் !

RanaNaidu

ராணாவின் ‘நாயுடு’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு உண்டாகியுள்ளது. 

‘பாகுபலி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. தமிழில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, பெங்களூரு நாட்கள், ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து ‘ராணா நாயுடு’ என்ற வெப் தொடரில் உள்ளார். 

RanaNaidu

சமீபத்தில் இந்த வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இந்த வெப் தொடரை இயக்குனர்கள் சுபர்ன் மற்றும் கரன் அன்ஷுமான் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த வெப் தொடரில் சுர்வீன் சாவ்லா, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

RanaNaidu

சிறையிலிருந்து வெளியே வரும் தனது தந்தையை கொல்ல நினைக்கும் மகனின் கதை தான் இந்த வெப் தொடர். இந்த வெப் தொடரில் சரளமாக கொட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு முகம் சுளிக்கும் வகையில் அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ராணாவை திட்டி தீர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வெப் தொடரில் நடித்தற்கான ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பை நடிகர் ராணா கேட்டுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள ட்விட்டர் பதிவில், இந்த வெப் தொடரை குடும்பதோடு சேர்ந்து பார்க்க முடியாது. இது ஏ சான்றிதழ் பெற்ற வெப் தொடர். தனியாக பாருங்கள் என்று கூறியுள்ளார். 


 

 

 

 

Share this story