யுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்

யுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்

இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்தவர் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய மாபெரும் சாதானைக்கு சொந்தக்காரரும் இவர் தான். அதுமட்டுமின்றி இந்தியா கடந்த 2011-ம் ஆண்டு இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமும் யுவராஜ் சிங் தான். அவரின் ஆல்ரவுண்ட் பர்பார்மன்ஸ் தான் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இவரது வாழ்க்கை என்பது பல்வேறு ஏற்ற இறக்கங்கள் மற்றும் வெற்றி தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்ததெல்லாம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வராஜ் சிங்கின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கப்பட வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

யுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்

மேலும், தனது பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என யுவராஜ் சிங்கே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது

Share this story