‘புஷ்பா 2’ சூட்டிங்கில் இருந்து வெளியேறினாரா ‘ராஷ்மிகா’ ?– ‘அல்லுஅர்ஜூன்’ செய்த மோசமான செயல்.

photo

2021ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா என பலர் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ எனற தலைப்பில் படமாக்கப்பட்டு வருகிறது.

photo

விறுவிறுப்பாக நடந்துவரும் படத்தின் சமீபத்திய செய்தியாக சாய்பல்லவி படத்தில் இனைந்ததாக சொல்லப்பட்டது. மேலும் தற்போது படபிடிப்பு தளத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பிரபல விமர்சகர் ஒருவர் பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது புஷ்பா 2 படப்பிடிப்பிலிருந்து நடிகை ராஷ்மிகா நேற்றையதினம் வெளியேறியுள்ளார். அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் அவரை மோசமாக கிண்டல் செய்தததால் கடுபான ராஷ்மிகா இப்படியான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

photo

photo

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை எப்பது தெரியவில்லை. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து காணலாம்.  

Share this story