ரன்பீருடன் முத்தக் காட்சியில் ராஷ்மிகா... நாளை வெளியாகும் முதல் பாடல்...

ரன்பீருடன் முத்தக் காட்சியில் ராஷ்மிகா... நாளை வெளியாகும் முதல் பாடல்...

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள அனிமல் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகிறது.

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

ரன்பீருடன் முத்தக் காட்சியில் ராஷ்மிகா... நாளை வெளியாகும் முதல் பாடல்...

தற்போது, படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் முத்தமிட்டுக் கொள்வது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story