விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ராஷ்மிகா?

விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ராஷ்மிகா?

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்திற்கு ஃபேமிலி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் பரசுராம் கலந்துக்கொண்டனர். 

விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ராஷ்மிகா?

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 

Share this story