காதலியின் பிறந்தநாளில் வெளியாகும் பேமிலி ஸ்டார்

ராஷ்மிகா பிறந்தநாள் பரிசு... விஜய் தேவரகொண்டாவின் திட்டம்...

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும். இந்த படத்தில் நடித்தது போன்று இல்லாமல் ரியல் ஜோடி போல வாழ்ந்தார்கள். இந்த பிறகுதான் இருவரும் ரசிகர்களிடையே பெரிய பிரபலம் அடைந்தனர்.  தற்போது முன்னணி நடிகர்களாக திரையுலகில் வலம் வரும் இவர்கள், காதலிப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்து இருவர் தரப்பிலும் எந்த மறுப்பும் வெளியாகவில்லை. 

ராஷ்மிகா பிறந்தநாள் பரிசு... விஜய் தேவரகொண்டாவின் திட்டம்...

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இது ராஷ்மிகாவின் பிறந்தநாள் அன்று வெளியாவதால் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். 

Share this story