ராஷ்மிகாவின் அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

ராஷ்மிகாவின் அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்திலிருந்து நீ வாடி எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகாவும், ரன்பீரும் முத்தக் காட்சியில் இப்பாடலில் நடித்துள்ளனர். பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Share this story