சல்மான்கான் படத்தில் ரேவதி... ராணுவ அதிகாரி வேடத்தில் அசத்தல்...

சல்மான்கான் படத்தில் ரேவதி... ராணுவ அதிகாரி வேடத்தில் அசத்தல்...

சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் டைகர் 3 படத்தில், ரேவதி ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.

சல்மான் கான் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 'ஏக் தா டைகர்' படத்தின் மூன்றாம் பாகமான 'டைகர் 3' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம், தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
கத்ரீனா கைப், இம்ரான் ஹாஸ்மி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பாலிவுட்டில் வெளியாகும் இந்திய உளவாளிகளின் பின்னணியில் இது உருவாகி உள்ளது. ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் தொடர்ச்சிதான் டைகர் 3 என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் முன்னோட்டமும் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னோட்டத்தை வைத்து பார்க்கையில், படத்தில் தமிழ் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ராணுவ அதிகாரி வேடத்தில் அவர் டைகர் 3 படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல ஹிந்தி படங்களில் ரேவதி நடித்திருக்கிறார், ஹிந்தி படத்தை இயக்கியும் இருக்கிறார்.

Share this story