சொந்த ஊரில் அரசு பள்ளியை தத்தெடுத்த ‘ரிஷப் ஷெட்டி’!...- குவியும் பாராட்டுகள்.
காந்தாரா படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சொந்த கிராமத்தில் உள்ள அரசு பல்ளியை தததெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய படம் காந்தாரா. கன்னடத்தில் தயாரான இந்த படம் மக்களிடம் பெற்ற வரவேற்பால் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார். தொடர்ந்து இதுபோல செய்ய உள்ளதாகவும், அதன் முன்னெடுப்புதான் இது என்றும் கூறியுள்ளார். ரிஷப் ஷெட்டி படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான் என மக்கள் வாழ்த்து வருகின்றனர்.