அடிதூள்... ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல்... மகிழ்ச்சியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர்

rrr

ஆஸ்கருக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. 

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த பாடல் ‘நாட்டு நாட்டு’. இந்த பாடலுக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பெற்ற அந்த பாடல் விருதை தட்டிச் சென்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

rrr

இதற்கிடையே இந்த ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் சிறந்த படம், நடிகர், நடிகை, பாடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுபபப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

rrr

இதில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் பிரிவில் இந்தியா சார்பில் குஜராத்தி படமாக ‘செல்லோ ஷோ’ அனுப்பப்பட்டது. இதுதவிர தனிப்பட்ட முறையில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் அனுப்பப்பட்டது. மேலும் சிறந்த வெளிநாட்டு படம், இயக்குனர், நடிகர் உள்ளிட்ட பிரிவுகளிலும் விண்ணக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆஸ்கர் இறுதி பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஹோல்டு மை ஹெண்ட், லைஃப் மீ அப், தி இஸ் ஏ லைஃப் உள்ளிட்ட நான்கு வெளிநாட்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாக உள்ளது. வரும் மார்ச் 12-ஆம் தேதி இதற்கான விழா நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘செல்லோ ஷோ’ படம் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story