புலிகளுடன் பாய்ந்தாரே அவர வர சொல்லுங்க... ஹாலிவுட் இயக்குனரை கவர்ந்த ஜூனியர் என்டிஆர் !

rrr

 ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்ததற்காக ஜூனியர் என்டிஆரை பிரபல ஹாலிவுட் இயக்குனர் வியந்து பாராட்டியுள்ளார். 

 உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த படமாக மாறியுள்ளது ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’. சமீபத்தில் இந்த படத்தின் பாடலுக்கு இரண்டு ஆஸ்கர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குனர்களும் பாராட்டி வருகின்றனர். 

rrr

அந்த வகையில் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் ஜேம்ஸ் கன். இவர் ஸ்கூபி டூ, கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றை அவர் அளித்தார். அந்த பேட்டியில், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த அவர் யார் ?. அருமையாக இருக்கிறார், அவரது பெயரென்ன ?.. கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் கூண்டிலிருந்து புலிகள் வெளியில் வரும்போது, அவரும் சீறிக் கொண்டு வருகிறார். 

rrr

ஒரு நாள் அவருடன் பணி புரியம் வேண்டும். அவர் அற்புதமானவர், கூலானவர் என்று கூறினார். அவரை என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு தெரியாது என்றார். அவரை வைத்து படம் இயக்கும் போது அது என்னவென்று தேர்வு செய்ய வேண்டும். அதற்கு கொஞ்ச காலம் ஆகும் என்று கூறினார். ஜூனியர் என்டிஆரை ஹாலிவுட் இயக்குனர் பாராட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story