'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு ஆஸ்கர் விருது.... உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்துபெற்ற ராம் சரண் !

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில் நடிகர் ராம் ரண், அவரது தந்தை சிரஞ்சீவியுடன் சென்று அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. உலக அளவில் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருது கிடைத்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஒரிஜினல் பிரிவில் இந்த விருது கொடுக்கப்பட்டது.
இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணியும் பாடலாசிரியரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். இந்த விழாவை முடித்துக் கொண்டு 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் நேற்று இந்தியா திரும்பினார். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனது தந்தை சிரஞ்சீவியுடன் நடிகர் ராம் சரண் சந்தித்தார். அப்போது அமித்ஷாவிடம் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் வாழ்த்துபெற்றனர். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, ராம் சரணை வாழ்த்தியதற்கு நன்றி என்று கூறினார்.
Thank you Shri @AmitShah ji for your Hearty Wishes & Blessings to @AlwaysRamCharan on behalf of Team #RRR for a successful Oscar Campaign & bringing home the First ever Oscar for an Indian Production! Thrilled to be present on this occasion! #NaatuNaatu #Oscars95@ssrajamouli pic.twitter.com/K2MVO7wQVl
— Chiranjeevi Konidela (@KChiruTweets) March 17, 2023