ஆஸ்கர் பட்டியலில் ஜூனியர் என்டிஆர்... அமெரிக்க நாளிதழ் கணிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள் !

junior ntr

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பட்டியலில் ஜூனியர் என்டிஆரின் பெயர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஆங்கிலம் நாளிதழ் ஒன்று கணித்துள்ளது. 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. 

junior ntr

நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ விருதுக்கு போட்டியிட்டது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் வரும் ஜனவரி 24-ஆம் தேதி 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகவிருக்கிறது. இதில் ஆர்.ஆர்.ஆர் படம் சிறந்த ஒரிஜினல் பாடல் மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நிச்சயம் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  

இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க நாளிதழ் ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றையும் நடத்தியுள்ளது. அதில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் முதல் வரிசையில் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பட்டியலில் டாம் க்ரூஸ், பால் மெஸ்கல், பால் டேனோ, மியா கோத் உள்ளிட்ட பெயர்களும் இடம்பெறும் என தெரிகிறது. 

 

Share this story