ஆஸ்கரை தட்டித்தூக்கிய ‘நாட்டு நாட்டு’ பாடல்.. ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம் !

oscar

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 

உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த விருது விழாவில் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட படைப்புகள் போட்டியிட்டன. அதில் இந்தியாவின் சார்பில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடல், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ட் ஆகியவை போட்டியிட்டன. 

oscar

முதலில் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து போட்டியிட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இது ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரமாக கருதப்படுகிறது. 

oscar

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. கடந்த ஆண்டு இந்தியாவின் பல மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story