'ஆர்ஆர்ஆர் 2' உருவாகிறதா ?.... ராஜமெளலி கொடுத்த சூப்பர் அப்டேட் !

rrr2

'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமெளலி சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.  ‌

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவாகி வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவான இப்படம் சுமார் 550 கோடி பட்ஜெட்டில் தயாரானது. 

rrr2

தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் உருவான இப்படம் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியானது.  அனைத்து மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில் இந்த படத்தின் வெற்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. 

rrr2

பல விருதுகளை குவித்து வந்த இந்த படம் முதலில் கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதை வென்றது. இதன் மூலம் உலக சினிமா கவனத்தையும் 'ஆர்ஆர்ஆர்' பெற்றது. இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை ராஜமெளலி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும். உடனடியாக படத்தின் பணிகளை விரைவுப்படுத்த முடிவெடுத்துள்ளேன். கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதனால் அதையே தந்தையிடம் சொல்லி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதியவுடன் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்று கூறியுள்ளார். 

Share this story