'ஆர் ஆர் ஆர்' படத்தின் முக்கிய நடிகர் காலமானார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் காலமானார்.
கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுமார் 1000 கோடிக்கு மேலான வசூல் சாதனை படைத்த இந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேப்போல இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தனர். குறிப்பாக படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் பிரிட்டிஷ் கவர்னராக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குறிப்பாக படத்தின் இயக்குநர் ராஜமௌலி அவருடனான அனுபவத்தை பகிர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ அதிர்ச்சி….. இந்த செய்தியை என்னால் நம்பமுடியவில்லை, செட்டில் எப்போதும் துடிப்பாகவும், ஆற்றலுடனும் செயல்படுவார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்காக பிரத்தித்துகொள்கிறேன் “ என பதிவிட்டுள்ளார்.