உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் படத்தில் சாய் பல்லவி
1695980818789
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் நாகசைதன்யா நடித்து வருகின்றனர்.
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து, நாக சைதன்யா நடிக்கும் 23-வது படத்திலும் சாய் பல்லவி இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை சந்து மொண்டேடி இயக்குகிறார். அல்லு அரவிந்த் வழங்க பன்னி வாசு தயாரிக்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்ற நடிகர் - நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.