கிருத்தி சனோனை தொடர்ந்து சீதை வேடத்தில் சாய் பல்லவி?

கிருத்தி சனோனை தொடர்ந்து சீதை வேடத்தில் சாய் பல்லவி?

நடிகை சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சினிமாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் உருவாகி வருகிறது. முன்னதாக நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா நடிப்பில் ஸ்ரீ ராம ஜெயம் திரைப்படம் ராமாயண கதையை தழுவி வெளியானது. அண்மையில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது.
 

கிருத்தி சனோனை தொடர்ந்து சீதை வேடத்தில் சாய் பல்லவி?

இதற்கிடையில் மீண்டும் ஒரு ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்படி நித்தேஷ் திவாரி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இதில் சீதையாக ஆலியா பட் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஆலியா பட்டுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் யாஷ் இதில் ராவணனாக நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Share this story