வெறித்தனமான லுக்கில் சையிப் அலிகான்.. பிறந்தநாளையொட்டி ‘தேவரா‘ கேரக்டர் போஸ்டர் வெளியீடு !

Devara

பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் பிறந்தநாளையொட்டி ‘தேவரா’ படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'தேவரா'. கடலோர பின்னணியில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.‌ 

Devara

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை நந்தமுரி தாரகா ராமாராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சையிப் அலிகான் வெறித்தனமான லுக்கில் இருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

Share this story