சைந்தவ் படத்தின் முன்னோட்டம் நாளை ரிலீஸ்
ஆர்யா - வெங்கடேஷ் இணைந்து நடித்துள்ள சைந்தவ் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.
பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள `சைந்தவ்' திரைப்படத்தில் ஆர்யா, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக `சைந்தவ்' திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் ஆர்யா, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நவாசுதீன் சித்திக், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா, சரா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைலேஷ் கொலானு படத்தை இயக்கியிருக்கிறார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.