படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்
Tue Apr 09 2024 6:25:28 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சிக்கு பிறகு காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது 'பேடாஸ்' பாதைக்கு திரும்பியுள்ளார். பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.
அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் நாளை முழு வீச்சில் நடித்து முடிக்கிறார்.