‘சகுந்தலம்’ படத்தின் புரொமோஷனை தெய்வத்தின் ஆசியுடன் தொடங்கிய படக்குழு –வீடியோ வைரல்.

photo

சமந்தாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘சகுந்தலம்’ படத்தின் புரொமோஷனை தொடங்குவதற்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள பிரதி பெற்ற கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செய்துள்ளனர் படக்குழுவினர்.

photo

தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் சமந்தா. சமீப காலமாக ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக உள்ளார். அதற்கு காரணம் நாகசைத்தன்யா உடனான விவாகரத்துதான். விவாகரத்திற்கு பின்னர் சினிமா மீது அதீத கவனத்தை செலுத்திவரும் அவர். பெண்மைய்ய கதாபாத்திரங்களை அதிகமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் புராண கதையை மைய்யமாக வைத்து தயாரான ‘சகுந்தலம்’ படத்தில்  சகுந்தலையாக நடித்துள்ளார். 

photo

இந்த படத்தை ‘ருதரமாதேவி’ படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோவாக தேவ் மோகன் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு, கௌதமி, அதிதி பாலன், மற்றும் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இதற்கு முன்னர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில பல காரணங்களால், தள்ளிப்போன நிலையில் தற்போது அடுத்தமாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

இதனால் புரொமோஷன் பணிகளை துவங்குவதற்கு முன்னர், ஐதராபாத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெடம்மா தல்லி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திகடனாக புடவை,பூ, வளையல் உள்ளிட்டவற்றை செலுத்தியுள்ளனர். இது தொடர்பான விடியோவை சமந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story