நவநாகரீக சரித்திரத்தின் ஆரம்ப புள்ளி சகுந்தலா….. – வெளியானது ‘சகுந்தலம்’ படத்தின் டிரைலர்.

photo

ருத்ரமாதேவிபடத்தை இயக்கிய இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் தயாரகியுள்ள திரைப்படம்சகுந்தலம்’, இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்களோடு இணைந்து அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குணா டீம் ஒர்க்ஸ்  நிறுவனம் சார்பில் நீலிமா குணா இந்த படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்ய மணிசர்மா இசையமைத்துள்ளார்.

photo

photo

இந்த திரைப்படம் புராண காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அதாவது விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள், சகுந்தலை. இவர், மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன். முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு துன்பங்களை கடந்து கணவருடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை. இதுவே சகுந்தலம் படத்தின் மைய்ய கரு.

photo

photo

படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் சம்தாவின் நடிப்பு ரசிகர்கள் பாரட்டும்படி  அமைந்துள்ளது. டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this story