வசூலில் வெற்றிகொடி நாட்டும் ‘சலார்’- இரண்டாம் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

photo

சலார் திரைப்படம் உலக அளவில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் இரண்டாம் நாள் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆன படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள  இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக மிரட்டியுள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்திற்கு நேமறையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் முதல் நாள் ரூ.165 கோடி முதல் ரூ. 175 கோடிவரை வசூல் செய்தது. தற்போது இரண்டாவது நாளில் ரூ. 260 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, இதே வேகத்தில் சென்றால் படம் சீக்கிரம் 500 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story