‘சலார்’ பட ப்ரீ புக்கிங்கே இத்தனை கோடியா!- வாய்பிளக்க வைக்கும் தகவல்.

photo

பிரபாஸ் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு தொகை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

photo

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இன்று ரிலீஸ் ஆகியுள்ள  படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள  இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக மிரட்டியுள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்திற்கு நேமறையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்து பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

Share this story