‘சலார்’ பட புது ரிலீஸ் தேதி இதோ!- மாஸ் காட்டும் ரெட்ஜெயண்ட்.
1699608171201
‘சலார்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை யார் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’ பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள சலார் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 28ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்னர் சில பல காரணங்களால் அது மாற்றப்பட்டது. இந்த நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது, அதன்படி படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் படத்தின் தமிழக வெளியீட்டு உரினையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளனர். இது குறித்த போஸ்ட்டரும் வெளியாகியுள்ளது.