முன்பதிவில் மாஸ் காட்டும் சலார் திரைப்படம்

முன்பதிவில் மாஸ் காட்டும் சலார் திரைப்படம்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

முன்பதிவில் மாஸ் காட்டும் சலார் திரைப்படம்

இந்நிலையில், சலார் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் முன்பதிவில் மட்டுமே இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூலித்ததுள்ளது. 
 

Share this story