இத்தனை கோடியா!.....- ரிலீசுக்கு முன்பே வசூலில் கலைகட்டிய ‘சலார்’.

photo

பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் சலார் படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்பே தெலுங்கு திரையரங்க உரிமையில் மட்டும் பல கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

photo

 தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகிவரும் படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ளனர்.  இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு ஒரு வழியாக டிசம்பர்22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை  பெற்ற நிலையில் தற்போது படம் வெளியீட்டிற்கு முன்பே பல கோடிகளை பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது தெலுங்கு திரையரங்க உரிமை மட்டும் ரூ. 182 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தெலுங்கு திரையுலகில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

Share this story