பிரபாஸ் பிறந்தநாள் அன்று வெளியாகும் சலார் டீசர்

பிரபாஸ் பிறந்தநாள் அன்று வெளியாகும் சலார் டீசர்

'கேஜிஎஃப் 2' படத்திற்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், 'சலார்'. பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ், மலை போல் நம்பி உள்ள படம் சலார். ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், டிசம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. 

பிரபாஸ் பிறந்தநாள் அன்று வெளியாகும் சலார் டீசர்

இந்நிலையில் சலார் படத்தின் டீசர் இந்த மாதம் 22-ம் தேதி பிரபாஸின் பிறந்த நாளை ஒட்டி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share this story